11/23/2008

இதுக்கு மேல நடந்து பாக்கறீங்களா?

கண்ணாடியாலான ஒரு பாலத்தை கொலராடோ ஆற்றிற்கு மேலாக கட்டியிருக்கிறார்கள். Sky walk Bridge என பெயர். அட, ஆத்துக்கு மேலதா பாலம் கட்டுவாங்க. இதுல என்ன இருக்குனு கேக்குறீங்களா?

கடல்மட்டத்திலிருந்து 4000அடி உயரத்துல கட்டிருக்காங்க

71 போயிங் 747 விமானங்களை முழு பாரத்தோடு தாங்கவல்லது ( பயணிகளோடு )

அங்கே கிட்டத்தட்ட 8 வெவ்வேறான திசைகளிலிருந்து 100மைல் வேகத்தில் காற்று வீசும்.

1 மில்லியன் பவுண்டு எடையுள்ள இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

”U” வடிவில் இருக்கும் வளைவு 70அடி நீளமுள்ளது

$25 மட்டுமே நுளைவுக் கட்டணம் ( பிரயாண செலவு எப்படினு எங்கயும் போடலை )

மார்ச் 28,2007 இலிருந்து பார்வையாளருக்கு திறந்திருக்கிறார்கள். ஆனா இப்போது நண்பரிடமிருந்து இமெயில் வரும்வரைக்கும் எனக்கு தெரியாது.

இதுக்கான பட்ஜெட் $30மில்லியன்

2004ல் ஆரம்பித்திருக்கிறார்கள்

படங்கள பாருங்க!!!

என்ன மக்களே. பாத்தீங்களா?

இத மெயில்ல பாத்துட்டு இத பத்தி தேடினா இந்த வெப் கிடச்சுது.

இங்க இது மாதிரி நிறய்ய கட்டட விபரங்களை கொட்டி தந்திருக்காங்க.

இந்த ஆற்றைப்பற்றிய விபரங்களுக்கு படங்களுடன்.


9 வாழ்த்துகளும், திட்டுகளும்:

ஜுர்கேன் க்ருகேர் November 23, 2008 8:04 PM  

பார்க்கும் போதே சும்மா அதிருதில்ல?
சுவராஸ்யமான தகவலுக்கு நன்றி

benzaloy November 23, 2008 8:27 PM  

We admire the interesting and educative post.

Thank you very much indeed,

சுகுமார் November 24, 2008 4:01 AM  

தற்போது அமெரிக்காலதான் இருக்கோம். இந்தியா கிளம்பறக்கு முன்னாடி இத பார்த்துறனும்னு ஒரு முடிவோடதான் இருக்கேன் :)

Blog-க்கு நன்றி

ஆட்காட்டி November 24, 2008 6:33 AM  

ம்ம்ம்ம்ம்

வால்பையன் November 24, 2008 8:30 PM  

என்னை அங்கே கூட்டிகிட்டு போறிங்களா?

enpaarvaiyil November 24, 2008 9:04 PM  

vithiyaasamaana thagavalgal
nanraaga ullathu.
thodarttum ungal pani
paaraattukkal.

Anonymous December 20, 2008 1:37 PM  

மக்களே இந்த பாலத்தில் நடக்க ஒருவருக்கு $68, அந்த பாலம் இருக்கும் இடத்திற்கு கொண்டு செல்ல $38. மேலிருந்து கீழே இறங்கி செல்ல எலிகாப்டர்க்கு $169 நபருக்கு, 9 நிமிட பயணத்திற்கு இந்த தொகை. அது மட்டும் இல்லாது, இந்த இடத்தை அடைய 230 மையில் வண்டியில் செல்ல வேண்டும். அனேகமாக லாசு வேகாசு செல்பவர்கள் அதிகம் அப்படியே பயணத்தி இங்கே தொடர்வார்கள். இந்த இடம் இருப்பது கிராண்டு கேனியன் மேற்கு கரை. இந்த இடத்தை அடையும் இடத்தில் ஒரு 17 மயிலுக்கு புழுதி தரையில் வண்டி ஓட்டிக்கொண்டு செல்லவேண்டும், ஐயப்பன் பயணத்தில் வரும் குண்டும் குழியுமான பாதை.

இந்த பாதையில் அவ்வப்போது திடீர் வெள்ளம் வரும் என்ற எச்சரிகையுடன் வழி தொடங்கும். அங்கு சென்று திரும்பும் வரையில் வழியில் கூட எதுவும் சாப்பிடக்கூட கிடைக்காது. அங்கு மலையில் இன்னமும் ஒரு விசேடம் அங்கு யாரும் புகைக்க கூடாது என்ற தடுப்பு.

மேலும் தகவல்களுக்கு எனது தளத்திற்கு வாருங்கள்.

பனிமலர்.

Bendz December 24, 2008 7:35 PM  

Hi,

Wish u merry Xmas and Happy New Year 2009 ;) Advanced wishes ;)

Insurance Agent

enpaarvaiyil December 30, 2008 8:26 PM  

அந்த இடத்திற்கு செல்ல விரும்புவர்களுக்கு பயனுள்ள தகவல்கள்.பாராட்டுக்கள்.

Wowzio Panoramic Slideshow

About This Blog

  © Blogger template 'Greenery' by Ourblogtemplates.com 2008

Back to TOP