1/01/2010

அவதார் -குமுதம் விமர்சனம்

குமுதம் இதழில் இந்த வாரம் வெளிவந்த அவதார் விமர்சனம் சுருக்கமாகவும் .நச் என்றும் இருந்தது ...சில புள்ளிவிபரங்களும் சுவாரஸ்யமாக இருந்தது ..ஆங்கில படங்களுக்கும் தமிழ் படம் போல விமர்சனங்கள் வெளிவர ஆரம்பித்து விட்டன ..இது ஆரோக்யமான போட்டிக்கு வழிவகுக்கும் என்றே கருதுகிறேன் .
வேட்டைக்காரன் போல கிறுக்குத்தனமான படங்களுக்கு நடுவே ..இந்த படங்களையும் பாமர மக்கள் பார்த்தால்தான் ...வேட்டைக்காரன் ஜாதி இயக்குனர்களின் திறமை லச்சணம் புரியும்.
கமல் எனும் அறிவு ஜீவி விட பெரிய அறிவாளிகள் பாட்டன்கள் உலகத்தில் இருக்கிறார்கள் என்பது புரியும்.
ரஜினி ,பொழுது போக்குக்கும் கதைக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர் ..பாமர மக்களின் வாழ்வு முறையை ..ஒட்டி எடுக்கபடுவதால் அவர் படங்கள் ஓடுகின்றன.ஆஸ்கர் அவர் எதிர் பார்ப்பது இல்லை. என்பது என் கருத்து


ஆயிரத்தில் ஒருவன் சினிமா விழாவில் கமல் பேசும்போது ,ஹாலிவுட் படம் போல எடுத்திருக்காங்க என்று பேசாதீர்கள் அவரை விட நாம் திறமை சாலிகள் என்றார் ..அப்படி ஹாலிவுட்டை விட திறமையாக என்ன செய்தார் என்று புரியவில்லை .இவர் இருக்க வேண்டிய இடமே வேறு என்று சிலர் சொல்வார்கள் ..இவர் இல்லாத ஹாலிவுட்டில் தான்... நடிகனே தேவைபடாமல் அவதார் கோடி கோடியாய் கொட்டிகொண்டிருகிறது .அங்கு இயக்குனர் மாத்திரமே நிற்கிறார் .

கமல் இந்தியாவை தவிர எங்கும் பொய் கிழிக்க முடியாது.ஏன் இந்தி சினிமாவில் கூட முயற்சி செய்து கோடிகணக்கில் பணம் அள்ளும் திறமை கமலுக்கு உண்டா ... சில திறமையான இயக்குனர்களால் தானே இவர் இவ்வளவு உயரத்திற்கு வந்தார் .இவர் இயக்கம் எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாதா ..பொண்டாட்டி அல்லது மகளை எவானாவது நடுரோட்டில் கற்பழிப்பான் அதை பார்த்து இவர் ஒ என்று அழுவார் இதுதான் நடிப்பாம் ..எனக்கு அன்பே சிவம் பிடிக்கும்.
கமல் தனது தயாரிப்பாளர்களுக்கு நிறைய சம்பாதித்து தர வேண்டும் .அதற்காக நடிகை தொடை காட்டியோ ,,அவள் வாயில் முத்தம் தந்து சம்பாதித்து தரட்டுமா என்று அவர் கேட்பார் .அவதார்.,ருத்ரம் போன்ற படங்கள் அப்படி சம்பாதிக்க வில்லை
அப்படி நிறைய சம்பாதிக்கும் படங்களை அவர் தந்தபின் ஹாலிவுட்டை விட நாம் பெரிய ஆள் என்று சொல்லலாம் ....இங்கு அந்த அளவு பொருளாதார வசதி இல்லை என்று அவர் சொல்லலாம் .சங்கர் அதற்க்கு உதாரணமாக இருக்கிறார்.செல்வராகவன் இருக்கிறார் .இவர்களோடு இணைந்து பெரிதாக தமிழ் சினிமாவை விஸ்தரிக்கலாம் .ஆனால் அவர்களை வேலை செய்ய விடாமல் இவர் கடும் தொந்தரவு தருவார் ...இவர் ஒரு மாதிரி சைகோ என நினைக்கிறேன் ..தசா அவதாரம் என்ற பெரிய படத்தை எடுத்து விட்டேன் என்று நினைத்தேன் .ஆயிரத்தில் ஒருவன் ட்ரைலர் பார்க்கும் போது நான் கத்துக்கவேண்டியது இன்னும் நிறைய இருக்கு ன்னு நின்னைக்கிறேன் என ரவிக்குமார் தன்னடக்கத்தோடு சொல்ல ,கமல் அவரை முறைத்த முறைப்பு இருக்கே அப்பா...
அவதார் -குமுதம் விமர்சனம் படிக்க கிளிக் செய்யவும்

8 வாழ்த்துகளும், திட்டுகளும்:

Kajan January 1, 2010 11:36 AM  

சார் தலைப்பை மாற்றுங்கள் "கமல் - விமர்சனம்" என்று.

Kajan January 1, 2010 11:40 AM  

'அவதார் -குமுதம் விமர்சனம் படிக்க படத்தை கிளிக் செய்யவும் ....... '

எந்த படத்தை சார்?

ஆர்.கே.சதீஷ்குமார் January 1, 2010 12:29 PM  

தப்பு பண்ணா உடனே பின்னூட்டம் வந்துடுது ...தேங்க்ஸ் கஜன் ....கஜன் நா யானை ங்களா ...அட அட என்ன ஒரு மங்கலமான ஆரம்பம் .... ...

பிரசன்னா January 1, 2010 1:10 PM  

கமலைப் பற்றிய உங்கள் விமர்சனத்திற்கு நான் முற்றிலுமாக உடன்படுகின்றேன்..
அனால் நம் தமிழ்நாட்டில் இதை மறுக்கும் கனவான்கள் தான் அதிகம்..

kantha January 1, 2010 1:52 PM  

அவரைவிடன்னு பேசறது நம்ம கொளந்தய நாம கொண்டாடறது மாதிரிதானே கண்டி, வேற ஓண்ணும் கிடையாதுன்னு கமலுக்கே தெரியும்தான்... ஆனா ஒரு பிரச்சனைய நீங்க புரிஞ்சுகிட்டுத்தான் ஆவணும்... ஆலிவுட் காரனுக்கு உலகம் fullஆ வியாபார சந்தை இருக்கு... நமக்கு, பக்கத்து stateகாரன் பாக்கணும்னா கூட மொழிபெயர்ப்பாளர் வச்சிகிட்டுத்தான் பாக்கணும்.. நம்மாளு கைக்கும் வாயுக்குமே நிதம் போராட்டம் பண்ணிக்கிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கான்.. இருக்குற தமிழர்கள்ள சினிமானு பாக்க அதுவும் நல்ல படம்னு பாக்க எங்க முடியுது..

ஆர்.கே.சதீஷ்குமார் January 1, 2010 6:31 PM  

பிரசன்னா தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

ஆர்.கே.சதீஷ்குமார் January 1, 2010 6:39 PM  
This comment has been removed by the author.
ஆர்.கே.சதீஷ்குமார் January 1, 2010 6:43 PM  

அப்படி சொல்ல முடியாது கந்தா ...ஒவ்வொரு புது முயற்சியின் போதும் பல மடங்கு வசூலை சில படங்கள் வாரி குவிக்கின்றன ...இந்த மொழி பிரச்சனையை உடைக்க தான் கமல் முன்பே பேசும் படம் என்னும் அனைவரும் ரசிக்கும் ஒரு ஊமை படத்தை எடுத்தார் ..நான் சொல்ல வருவது ..ஹே ராம் ,மற்றும் சில PADANKAL படு தோல்வியால் தயாரிப்பாளர்கள் மண் கவ்வ வேண்டியதாயிற்று.கமல் முதலில் பணம் குவியும் படியும்.ஒரு தரமான படமும் எடுக்க கற்று கொள்ள வேண்டும். அதன் பிறகு ஹாலிவுட்டை விட நாம் பெரிய ஆள் என சொல்லி கொள்ளலாம் என்றுதான் .தங்கள் கருத்துக்கு நன்றி.

Wowzio Panoramic Slideshow

லேபிள்கள்

About This Blog

  © Blogger template 'Greenery' by Ourblogtemplates.com 2008

Back to TOP