ஆங்கில, தமிழ் படங்களை இலவசமாக பார்க்கலாம்!
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அடையாறு கிரீன்வேஸ் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு ரூ.5 லட்சம் செலவில் மினி தியேட்டர் கட்டப்பட்டு உள்ளது.
கலைஞர் திரையரங்கம் என்று அதற்கு பெயரிடப்பட்டு உள்ளது. கனிமொழி எம்.பி. வருகிற 20-ந்தேதி இந்த தியேட்டரை திறந்து வைக்கிறார்.
இந்த தியேட்டரில் 30 முதல் 40 பேர் வரை உட்கார்ந்து பார்க்க வசதி செய்யப்பட்டு உள்ளது. ஆங்கில, தமிழ் திரைப்படங்கள் இங்கு திரையிடப்பட உள்ளன.
இதுபற்றி இயல் இசை நாடக மன்ற செயலாளர் கவிஞர் இளையபாரதி,
’’கலைஞர் திரையரங்கம் ஒருஆடியோ வீடியோ லைப்ரரியாக செயல்படும். பிரபலமான 1000 ஆங்கிலப்பட வீடியோக்களை சேகரித்து வைத்துள்ளோம். தமிழ் படங்களில் சிறந்த படங்களை தேர்வு செய்து வைத்துள்ளோம்.
குறிப்பாக பழைய படங்களான கண்ணகி, ஸ்ரீவள்ளி, கலைஞரின் பராசக்தி, மனோகரா, ராஜாராணி, ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள் போன்ற முக்கிய படங்களின் சி.டி.க்களை வைத்து இருக்கிறோம்.
எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், நடிகர்- நடிகைகள் போன்றோர் ஏதேனும் படத்தை பார்க்க விரும்பினால் அவர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்படும். இதற்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இலவசமாக பார்க்கலாம்.
உலக சினிமாக்கள், இந்திய சினிமாக்கள், தமிழ் சினிமாக்கள், ஆவண படங்கள் என 4 வகையாக வரிசைப்படுத்தி இப்படங்களை வைத்து இருக்கிறோம்.
அதோடு முக்கியமான இசையமைப்பாளர்களின் இசை ஆல்பங்களையும் இங்கு பார்க்கலாம். புதிய பாடகர்களின் பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.
உலகத்தரத்தில் “சவுண்ட் சிஸ்டம்” மற்றும் நவீன தொழில் நுட்பத்தில் இத்தியேட்டர் கட்டப்பட்டு உள்ளது. முக்கிய பிரமுகர்களை சேர்த்து “மூவி கிளப்” ஒன்றையும் விரைவில் தொடங்க உள்ளோம்’’என்று தெரிவித்துள்ளார்.

நன்றி-நக்கீரன்

0 வாழ்த்துகளும், திட்டுகளும்:
Post a Comment